தெய்வீக ஆலயத்திற்கு வந்த ஆச்சிரியப்பரிசு
பாகம்-10
இந்த கலியுகத்தில், நாம் கிருஷ்ணா மற்றும் கல்பனாவின் கதையை எழுதவும், கேட்கவும் முடிவது, நம்முடைய அதிர்ஷ்டம்.

இந்த இணையத்தளம், தொடங்கியபின், மற்ற பக்தர்களுக்குக் கிடைத்த கிருஷ்ணரின் ஆசீர்வாதம் பற்றியும் நாம் கேட்கின்றோம். அந்த பக்தர்களைப் பற்றியும் எதிர்காலத்தில் எழுதுவதற்கு அவன் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.
இப்பொழுது, ஒரு பக்தரின் வீட்டில், அவன் வாழ்கிறான் என்றால், முன்பு,மற்ற பக்தர்களுடன் வாழ்ந்திருக்கின்றானா என்று நாம் ஆச்சிரியப்பட வேண்டுமா?
அவனுக்குத் தேவை, முழுமையான பக்தியும்,நம்பிக்கையும் தான், வேறு ஒன்றும் இல்லை.
சுமார், 300 முதல் 400 வருடங்களுக்கு முன்னர், கிருஷ்ணர், ஒரு குழந்தையில்லாத விதவையுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவள் ஒரு நம்போதரி குடும்பத்தில் பிறந்தவள். சிறு வயதில் இருந்தே, அவள் ஸ்ரீ கிருஷ்ணரின்,சிறந்த பக்தை. வெஞ்சினிசேரி கிராமத்தில் உள்ள குரூர் இல்லத்தை சேர்ந்த ஒரு வயதான வேத அறிஞரான பிராமணருடன் அவளுக்கு திருமணம் நடந்தது. விதியின் வசத்தால்,அவள் பதினாறு வயதில் விதவை ஆனாள். அதன் பின்னர் ,அன்று இருந்த பழக்கவழக்கத்தின் படி, அவள் அடுப்பங்கரையிலும், பூஜையிலும், அவள் வாழ்க்கை அடங்கியது.

பகவான் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் எவ்வாறு திட்டம் போடுகிறார் என்று கண்காணியுங்கள்….
அவளுக்கு குழந்தையில்லாததால், அவள் எப்பொழுதும் கிருஷ்ணரின் நாமத்தையேக் கூறுவாள்.மெதுவாக, அவளுடைய சொந்த பந்தங்களும், அவளைக் கைவிட்டனர். அவள் அந்தப் பெரிய வீட்டில், தனியாக வாழ்ந்து வந்தாள். அவள், எந்த ஆசையுமில்லாத எளிமையானவள். அவள் அனைவருள்ளும் கிருஷ்ணாவைக் காண்பாள்.
அவளைப் பற்றியும், அவள் சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர் வில்வமங்களம் சுவாமியார் பற்றியும் பலக் கதைகள் இருக்கின்றன. இருவரும் கிருஷ்ணரின் சிறந்த பக்தர்கள்.
நான் கதையை விட்டு விலகி, அவர்கள் இருவரிடையே உள்ள இணைப்பை விவரிக்க மாட்டேன்.
அவளுடைய நிலையான பிரார்த்தனை என்னவென்றால்…
‘வேதங்களுக்கெல்லாம் ஆதி பிராமணரான, கருமைநிறக் காதல் கண்ணா, உன் குழந்தை உதடுகளில், புல்லாங்குழலைப் பிடித்து, எல்லா மகிமைகளுடன் என் முன்னே வருவாயாக’.
அவளுக்கு வயதாக, ஒருநாள் ,அவள் கிருஷ்ணரிடம் வேண்டினாள்…
‘ஓ என் பாலகோபாலா! எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை..அதனால், என்னுடன் எப்பொழுதும் இருப்பாயாக யசோதாவை விட்டதைப் போல, என்னைத் தனியாக விட்டுவிடாதே’.
கிருஷ்ணர்,இந்த பக்தையின் பக்தியைப் பாராட்டி, ஒரு சின்ன பிராமணப் பையனாக,அவளிடம் வந்தான். அவன் மாயையினால், அவளால்,பகவானை, அடையாளம் காண முடியவில்லை. அவள்,அவனை, அவள் பையனாகத் தத்தெடுத்தாள். அவன் அவளுடன் வாழ்ந்து வந்தான். அவளுக்கு, தினம் தோறும், எல்லா வேலைகளிலும் உதவி செய்வான். குறும்பு இல்லாத கிருஷ்ணரைக் கற்பனை செய்ய முடியாது….

அவன், அவளைக் குழந்தைப் போல் தொந்தரவு செய்வான். அவளும், அவனை, ஒரு நல்ல அம்மாவாக திட்டுவாள், கண்டிப்பாள்.
அவள், அவனை ‘உன்னி கண்ணா’ என்று அழைப்பாள்.
அவள், இந்த பூவுலகத்தைப் பிரியும் சமயத்தில், அவளை உன்னிகண்ணன், எடுத்து, அவள் உடலுடன் சென்றான் என்று நம்பப்படுகிறது. அவளின் அழிவிற்குப் பிறகு, அவள் வாழ்ந்த வீடும் சரிந்து விட்டது.
சமீபமாக, ‘அஷ்டமங்கள தேவபிரசனம்’ செய்தப் பொழுது, வெஞ்சினிசேரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் ‘ஸ்ரீ கிருஷ்ண சைத்தன்யம்’ இருக்கிறது என்ற தெய்வீக வெளிப்படுத்துதல் நடந்தது.

(அஷ்டமங்கள தேவபிரசனம், ஹிந்து ஜோதிடத்தில் உள்ள பிரசனக் கிளையில் பின்பற்றும் ஒரு பழக்கம். அது, கேரளாவில், பிரசித்திப் பெற்றது. அந்த சொல், எட்டு சுபப் பொருட்களின் உபயோகத்தைப் பழக்கத்தில் குறிக்கிறது. அது, தெரியாதக் காரணங்களையும், நிலைமையையும் தெரிந்து, அதற்கு பரிகாரம் செய்வது வழக்கம்).
அகழ்வாராய்ச்சிக்குப் பின்னர், இந்த பக்தையின் இல்லம் கண்டுபிடிக்கப் பட்டது. ஆச்சிரியமாக, 350 வருடங்களுக்கும் மேலாக, யாரும், அந்த நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை.
கிருஷ்ணர், அவனுடைய அம்மாவின் நிலத்தில் யாரை வாழ விடுவான்?
அவளுடையப் பெயர்…
‘குரூரம்மா’, அவளுடைய நிஜப் பெயர் ‘கெளரி’.
இப்பொழுது…
நான் ஏன் அவளைப் பற்றி எழுதினேன்???
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயம் அந்த இடத்தில் கட்டப் படுகிறது. பெயரும் அதற்கேற்றார் போல், ‘குரூரம்மா ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம்’ என்று வைக்கப்பட்டு இருக்கிறது.

கல்பனா, குரூரம்மா, தன்னை ஆசீர்வதிப்பதுப் போல், காட்சியைக் கண்டாள்.
350 வருடங்களுக்கு முன்னர்,புகைப்படங்கள் இல்லை. அவள் மிகவும், பிரபலமானவள் இல்லை என்பதால், அவளை யாரும் வரையவில்லை,சிலையும் வைக்கவில்லை.
அவளைக் காட்சிப் படுத்துவது, கடினமாக இருந்தது.
கிருஷ்ணாவிற்கு வேறு திட்டங்கள் இருந்தது.
அவர், கல்பனாவிடம்,குரூரம்மாவின் படத்தை வரைய உத்தரவிட்டார்.
கல்பனாவும், இந்தியாவில் உள்ள பல கலைஞர்களிடம் பேசினாள். ஆனால், அவள் எப்பொழுது கேரளா செல்வாள்? எப்பொழுது ,கலைஞர்களிடம்,குரூரம்மாவை எப்படி வரைய வேண்டும் என்று சொல்வாள்?
விதிக்கப்பட்ட சிலரால் மட்டுமே செய்யமுடியும் ,சரியா?
பகவான் ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்….பின்,வேறு யாராவது ஏன் செய்ய வேண்டும்.
திடீரென ஒரு நாள், கல்பனா,கீதாவிடம், கீதாவின் மகள், படத்தை வரைந்து, முயற்சி செய்ய முடியுமா என்று பரிந்துரைத்தாள். கல்பனாவின் மூலம், ஏற்கனவே, இந்த தெய்வப் பணியை யார் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
பக்தரிகளின் உணர்தலுக்காகக் காத்திருக்கிறார், அல்லவா???
அதுவும், அவனுடையச் செல்ல இரண்டாவது அம்மாவின் மூலம்???
குரூரம்மாவின் படம் வரையும் பணி ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும், கல்பனாவும், கீதாவின், மகள் பத்மினியும், காணொளி மூலம் வேலையை செய்து, கலந்துரையாடி,மாற்றுவர். ஒரு மாதம் ஆயிற்று, படத்தை வரைந்து முடிக்க. முழுப் படமும், கணினியில், வரைக்கலை மூலமாக முடிந்தது.
ஆதித்யா, பத்மினியின் கையைக் கிருஷ்ணர் பிடித்து, வழிகாட்டுவதைப் பார்த்தான். கல்பனாவிற்குத், தொலைப்பேசியில், கட்செவி அஞ்சல்(வாட்ச் அப்)இன் மூலம் வரைப்படம் கிடைத்தவுடன், கிருஷ்ணா, அவள் தோளின் மேலிருந்து ஓரக் கண்ணால், அந்த இறுதிப் படத்தை பார்ப்பதை ஆதித்யாப் பார்த்தான்.
கிருஷ்ணா, நீ நிஜமாகக் காண வேண்டுமா??
நீ தான், காரணகர்த்தா, கர்மா மற்றும் கிரியா.
இறுதியாக…
இந்தப் படம், குரூரம்மா ஸ்ரீ கிருஷ்ணா ஆலயத்திற்கு, ஆகஸ்ட் 2016இன் போது, நன் கொடையாகக் கொடுக்கப் பட்டது.
16ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த ஒரு பெண்மனியை உங்களால் கற்பனை செய்ய முடியுமா(1570இல் பிறந்து,1640இல் மோட்சம் அடைந்தார்). ஆனால், நாம், அவருடையப் படத்தை, இப்பொழுது, 2016இல் பார்க்கின்றோம்.
குரூரம்மா, எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள். கிருஷ்ணரே அவளுடன், அவள் மகனாக வாழ்ந்தார். அவள், வைகுண்டத்திற்கே இந்த பூத உடலுடன் செல்ல எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
புகைப்படம் நன்கொடையாக வழங்கப் பட்டது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்…
7-8 வயது மிக்க சிறுவன், எங்கிருந்தோ வந்து பத்மினிக்கு, மஞ்சடிக்குருவைக் கொடுத்துவிட்டு, அவள் அருகே அமர்ந்து, முகம் காமித்து, விளையாடிக் கொண்டிருந்தான். ஆதித்யாவிற்கு, கிருஷ்ணர், அந்தப் பையன் வடிவில் வந்தது தெரிந்தது.
கிருஷ்ணருக்கு, பத்மினிக்கு எல்லோரும் முன்னிலையிலும் பரிசளிக்க வேண்டும். அதனால் அவன், இவ்வாறு செய்தான் அவள் எவ்வளவு பாக்கியம் செய்தவள்???
“நான் , என்னை, என்னுடைய’ என்ற சுயநலக் கூண்டிலிருந்து வெளியே வருபவர்கள், கடவுளுடன் இணைகிறார்கள். இதுதான், உச்சநிலை. இதை அடைந்தால், சாவிலிருந்து விடுபட்டு, அழியா வரம் பெறுவர்”.

வெஞ்சிலசேரி, கேரளா,இந்தியாவில் உள்ள குரூரம்மா ஆலயத்திற்கு செல்ல
இங்கே
அழுத்தவும். குருவாயூரிலிருந்து குரூரம்மா ஆலயத்திற்கு செல்ல 18.1 கி.மீ தொலைவிலும்,மகிழூந்தியில்(காரில்) இருபது நிமிடங்களிலும் செல்லலாம். குருவாயூர் செல்லும் பொழுது, குரூரம்மா ஆலயத்திற்கு சென்று கிருஷ்ணரை மேலும் மகிழ்வித்து, அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

ஹரே கிருஷ்ணா
‘அடுத்த பாகத்தில்,’செளந்தரியலஹரி’யைப் பற்றிக் காணலாம்’