குருவாயூரில் ஏற்ப்பட்ட அனுபவங்கள்
ஸ்ரீ குருவாயூர் புரமதி இராமாநியம்
பூலோக வைகுண்டம் ஸ்ரீ கிருஷ்ண சந்நித்யம்
பக்த பாராயணம் நாராயண நாமம்
நித்யம் முழ்னும் ஜெஹாமிதாதிபுண்யம்
அர்த்தம்
குருவாயூர் புரம் இதயத்தை இழுக்கும் அழகின் உறைவிடம். இது பூலோகத்தின் வைகுண்டம். ஏன் என்றால், இங்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பு எப்பொழுதும் பக்தர்களால் உணரப்படுகிறது. இது இறைவனின் புனித ஸ்தலம்,இங்கு எப்பொழுதும், பக்தர்களை சம்சாரக் கடலைக் கடக்க உதவும் நாரயண நாமம் அதிர்ந்துக் கொண்டே இருக்கும்.
பாகம்-12
கல்பனா கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் குருவாயூர் செல்வது வழக்கம். கிருஷ்ணரின் ஆசீர்வாதம் கிடைக்கத் தொடங்கிய சமயம் முதல் ,ஒவ்வொரு முறை அவர்கள் குருவாயூர் செல்லும் பொழுதும் ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும்.
அது ஜூலை 2010,கல்பனா குருவாயூர் சென்றப் பொழுது. கடைசிப் பூஜை ஆதாழப் பூஜை(இரவு 8 மணிக்குப் பின் நடக்கும் பூஜை). கர்பக்கிரகம் மூடியப் பிறகு, கிருஷ்ணனின் உட்சவ விக்ரகம்(விழாக் கால விக்ரகம்) வெளியே எடுத்து வரப் பட்டு, ஆலயத்தைச் சுற்றி யானையின் மீது வலம் வரும்.
இதன் அலங்காரத்தையும், இதன் ஆடம்பரத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மொத்த ஊர்வலத்தின் அழகையும் பார்ப்பதற்கு நமக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

திடீரென கல்பனா யாரோ ஒரு பிராமணர் சிலைப் போல் நின்று தன்னையே உற்று நோக்குவதைப் பார்த்தாள்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்…..
அவர்,பழங்கால பிராமணர்கள் போல் தலையில் குடுமியை ஒரு புறமாக அணந்திருந்தார். இப்பொழுது நம்மால், நம்போதரிகள் இதுப் போல் அணிகிறார்களா?? திடீரென அவர் குனிந்து, காணாமல் போனார். கல்பனா அவரை எங்காவது பார்க்க முடிகிறதா என்றுத் தேடினாள். ஆனால், அவரை எங்கும் பார்க்க முடியவில்லை.

அடுத்த வருடம், 2012, அவர்கள் மதியத்தில் நடக்கும் பண்டிரதப் பூஜையின் போது ஆலயத்தில் இருந்தனர். அச்சமயத்தில் பகவானுக்கு பெரிய ஹண்டியில்(பாத்திரம்) பால் பாயாசம் நெய்வேத்யமாகப் படைக்கப்படும். சாதாரணமாக இந்தப் பால் பாயாசம் நெய்வேத்யத்திற்குப் பின், காலையில் சீட்டு வாங்கும் பக்தர்களுக்குக் கொடுக்கப்படும். நெய்வேத்யத்தை சமைக்கும் அறையில் இருந்துக் கர்பக் கிரகத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது, நெய்வேத்யம் எடுத்து செல்லும் இடத்திற்கு மிக அருகில், கல்பனாவும், அவளதுக் குழந்தைகளும், ஆலயத்தைச் சுற்றி பிரதக்ஷனை செய்யும் இடத்தில் காத்திருந்தார்கள்.
திடீரென ஒரு இளம் பிராமணர், ஆதித்யாவிடம் பாயாசத்தைக் காண்பித்து, ‘அது என்ன?’ என்றுக் கேட்டார். ஆதித்யா மீண்டு, பதிலளிக்கும் முன்னர், அந்த பிராமணர் காணாமல் போய் விட்டார்.
2013இல்,மீண்டும் பண்டிரதப் பூஜையின் போது,கல்பனா நெய்வேத்யத்திற்குப் பின் பால் பாயாசம் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தாள். அவள் குழந்தைகாள் ஆதித்யாவும், மாளவிகாவும், பிரதக்ஷினை நடக்கும் அறையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் , ஒரு சின்னக் குழந்தை வைத்திருக்கும் ஒரு குடும்பமும் அமர்ந்திருந்தனர். ஒரு வயதான பிராமணர், நடப்பதற்கேக் கஷ்டப்படும் ஒரு பிராமணர், குழந்தை வைத்திருக்கும் குடும்பத்திற்கு அருகில் சென்று ஒரு வாழை இலையில் பிரசாதம் கொடுத்தார். அவர், பின் ஆதித்யா இருக்கும் திசை நோக்கி, அந்த ஜோடியை பிரசாதத்தை ஆதித்யாவிற்கும் கொடுக்கும் படி கூறினார். அவனை தன் தங்கைக்கும் கொடுக்கும் படிக் கூறினார். அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, சில அடிகள் எடுத்து வைத்தப் பின்னர், அவர் திரும்பி, ஆதித்யாவையும் அவன் தங்கையையும் பார்த்தார்.
ஆச்சிரியமாக அவர்கள், என்ன பார்த்தார்கள்?அவர் வாழை இலையில் அவல் பாயாசம் வைத்திருந்தார்.
அவருக்கு எங்கிருந்துக் கிடைத்தது???
அவர் மாளவிகாவிடம் வந்து, அவள் கையை விரிக்கும் படிக் கூறினார். அவள் கையில் அந்த இலையை வைத்தார். ‘இந்தப் பிரசாதத்தைச் சாப்பிடு. இது குருவாயூரப்பனின் பிரியப் பிரசாதம். நீ சாப்பிடுவதைப் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது’ என்றுக் கூறினார். பிரசாதத்தை அவள் கையில் வைக்கும் பொழுது, அவளால், ஒரு மின்சார அதிர்ச்சியை அவளுக்குள் போவதை உணர முடிந்தது.
கொஞ்சம் பிரசாதம் சாப்பிட்டப் பின் அவர்கள் மேலே பார்த்தப் பொழுது, அவரைக் காணவில்லை.
நடக்கவே முடியாத ஒருவரால், எப்படி இத்தனை வேகமாக காணாமல் போக முடியும்???
அறைக்கு வந்தப் பின் கல்பனா கிருஷ்ணாவிடம் யார் அந்த பிராமணர் என்றுக் கேட்டப் பொழுது, அவர்,’நீ ஏன் சந்தேகப்படுகிறாய் அம்மா?’ என்று பதில் கூறினார்.
அதே பயணத்தின் பொழுது,கல்பனா கிருஷ்ண ஆட்டம் பார்ப்பதற்காக சென்றப் பொழுது யாரோ அவளைப் பின்னிருந்துத் தொடுவதுப் போல் உணர்ந்தாள். திரும்பியப் பொழுது யாரும் இல்லை.
மீண்டும் 2015இன் போது…..
அவள் பிரியக் குருவாயூரப்பனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றாள். திடீரென யாரோ அவள் கையைப் பிடிப்பதைப் போல் உணர்ந்தாள். திரும்பிப் பார்த்தப் பொழுது, அது அந்த பகவான் கிருஷ்ணர் தான் தன் கையைப் பிடித்திருந்தார்.
அவளுடன் வந்திருந்த அவள் உறவினர் அனைவரும், அவளைச் சுற்றி யாரும் பார்க்காதக் கவசம் போட்டது போல்,அதிகம் இடம், இருந்ததைப் பார்த்தனர்.
அவள் கர்பக் கிரகம் அடைவதற்கு முன்னர், அவள் மிதப்பதைப் போல் உணர்ந்தாள். காவல் அதிகாரிகள் பக்தர்களை சீக்கிரம் போவதற்காக தள்ளிவிட்டும் கத்திய வண்ணமும் இருந்தனர். கல்பனா கர்பக்கிரகத்தை அடைந்தப் பொழுது அனைவரும் உறைந்து ,அமைதியாக,எதுவும் சொல்லாமல் அவளை பார்க்க ஆரம்பித்தனர்.
அவள் கைகளைக் கூப்பி,கிருஷ்ணருடையக் கைகளையும் கூப்பி, பகவான் முன்னர் ஐந்து நிமிடம் ,காவல் அதிகாரிகளின் தொந்தரவு இல்லாமல் அமைதியாக பிரார்த்தனை செய்தாள். அவள் வெளியே சென்ற உடன் ,யாரோ மாயையை களைந்ததைப் போல, காவல் அதிகாரிகள் திரும்ப பழைய நிலைக்குத் திரும்பினர்.

கிருஷ்ணர், கல்பனாவுடன் ஒரு பிரதக்ஷனை செய்தார். அவள், ஆலயத்தை விட்டு வெளியே வந்த அடுத்த நொடி, அவர் கூட்டத்தில் காணாமல் போனார்.
கல்பனாவும் குடும்பத்தினரும் ஒவ்வொரு முறையும் பார்த்த இளம் மற்றும் வயதான பிராமணர்கள் யார்???
கிருஷ்ணர் கூறுவதுப் போல்…
நாம் கேட்க வேண்டுமா???
யார் அவர்கள் என்று நாம் சந்தேகப்பட வேண்டுமா???
ஹரே கிருஷ்ணா
கல்பனாவும் குடும்பத்தினரும் ஒவ்வொரு முறையும் பார்த்த இளம் மற்றும் வயதான பிராமணர்கள் யார்???
கிருஷ்ணர் கூறுவதுப் போல்…
நாம் கேட்க வேண்டுமா???
யார் அவர்கள் என்று நாம் சந்தேகப்பட வேண்டுமா???
ஹரே கிருஷ்ணா
‘அடுத்த பாகத்தில்,கிருஷ்ண லீலைகளைப் பற்றிக் காணலாம்’