கிருஷ்ணரின் குறும்பு
பாகம்-9
சின்ன உன்னி கண்ணனுக்கு, கல்பனாவின் வீட்டில் விளையாடுவதும், தந்திரங்கள் செய்வதும் என்றால் உயிர்.
கல்பனாவின் வீட்டில் ஒரு வெள்ளைப் பலகை இருக்கிறது. திடீரென்று, அந்தப் பலகையில் , கிருஷ்ணரின் படம் தோன்றியது.

மற்றொரு நாள், பிள்ளையார்.
ஒரு நாள், கல்பனா பிரார்த்தனை செய்யும் பொழுது, அவளின் பக்கத்து மேஜையில், ஒரு முத்து மாலை இருந்தது. அவளுக்கு, மேஜையின் மேல் ஏதோ நகர்வது போல், ஒரு சத்தம் கேட்டது. பூஜை முடிந்ததும், அவள், தரையில் இருந்து எழுந்தப் பொழுது, அவள் என்னக் கண்டாள்….
முத்து மாலை, ஆங்கிலத்தில் ‘க’(K) என்பதுப் போல், சீரமைக்கப்பட்டு இருந்தது.
அது எவரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது? ‘கிருஷ்ணா’வா அல்லது ‘கல்பனா’வா??

சுமார், நான்கு வருடங்களுக்கு முன்னர்…
ஒரு வெள்ளிக்கிழமை மதியம், கிருஷ்ணர், கல்பனாவிடம், தான் ஆதித்யாவின் உடம்புக்குள் நுழைய அனுமதிக் கேட்டார்.
கிருஷ்ணருக்கு, கல்பனாவின் அனுமதி உண்மையாகத் தேவையா?
ஆனால், எது செய்தாலும், அவன் எப்பொழுதும், அவனது அம்மா, கல்பனாவின் அனுமதியைக் கேட்டுத் தான் செய்வான்.
இந்தத் தலைமுறைக் குழந்தைகள், இந்தப் பண்பாட்டைக் கற்றும், பின்பற்றவும் வேண்டும் என்று நினைக்கிறேன்…மூத்தவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை… எப்பொழுதும் போல், கல்பனாக் கூறினாள், ‘உன்னி கண்ணா, நீ என்னிடம், அனுமதிக் கேட்க வேண்டாம். தயவு செய்து, உன் இஷ்டப் படி செய்’.
அடுத்தக் கணம்…
ஆதித்யா, அவனுடைய வாழ்க்கை அறையில் இருந்து காற்றைப் போல், ஓடி வந்தான்.

கல்பனாவும், குடும்பத்தினரும், ஆச்சிரியத்துடன், அவனைத் தேடிச் சென்றனர். ஆதித்யாவை எங்கும் காணவில்லை.
திடீரென்று அவர்கள் என்னப் பார்த்தனர்…?
ஆதித்யா, ஒரு மூலையில், அரைக் கிலோ வெண்ணெயுடன் உட்கார்ந்து, அதைத் தோண்டி, விழுங்கிக் கொண்டிருந்தான். கல்பனா, வெண்ணெய்ப் பையை, தண்ணீர் கோப்பையின் மேல் வைத்திருந்தாள். அதை அவள் மறந்துவிட்டாள். பொதுவாக, ஆதித்யாவிற்கு, வெண்ணெய் சாப்பிடுவது பிடிக்காது. ஆனால், அன்று, முழுவதையும் சாப்பிட்டு விட்டான்.

ஆதித்யாவின் உடம்பில் கிருஷ்ணா. நாம், கிருஷ்ணரை, மனித உடலுக்குள், இவ்விதம் நுழைவதை எதிர்பார்க்க முடியுமா??
அன்று, ஆதித்யா, நிறையக் குறும்பு செய்தான். அதை, அவன் கண்டிப்பாக சுய உணர்வோடு செய்யவில்லை.
முழுக் குடும்பமும், வாழ்க்கை அறையில் உட்கார்ந்து, ஆதித்யா என்ற கிருஷ்ணாவின் விசித்திர செயல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று, ஆதித்யா, சுரேஷ்யை (கல்பனாவின் கணவரை) ஒருக்கை வைத்து இழுத்துக் கீழேத் தள்ளி விட்டான். அடுத்தக் கணம், அவனைத் தூக்கி, திரும்ப, நாற்காலியில் அமர வைத்தான். சில நிமிடங்கள், கழிந்தப் பிறகு, திரும்பவும் கீழேத் தள்ளி விட்டான்.
ஒரு பதினோறு வயது சிறுவன், ஒரு கனமான மனிதரைக் கீழேத் தள்ளி, திரும்ப ஒரு கையால் தூக்கி விடுவதைக் கற்பனைச் செய்து பாருங்கள்…
அத்தனை, வலிமையும், ஆற்றலும், அதைச் செய்வதற்கு அவனுக்கு இருக்கிறதா?
ஆதித்யா, நான்கு அடி உயரம் உள்ள, மேஜையின் மேல் எதையும் பிடிக்காமல் குதித்தான். நம்மால் ,ஒரு உயரத்தில் இருந்துக் கீழே எதையும் பிடிக்காமல், குதிக்கலாம். ஆனால், கீழிருந்து மேல், எதையும் பிடிக்காமல், குதிக்க முடியுமா…..தடகள வீரர் ஆக இருந்தால் வரை, மற்றபடி, சாதாரண மனிதருக்கு , இது சாத்தியமில்ல.
சுரேஷின் முதுகின் மேல், ஆதித்யாவிற்கு குதிரை சவாரி செல்ல வேண்டும். பாவம் சுரேஷ் , வேறு வழி அவருக்கு இல்லை…கிருஷ்ணாக் கூறுவதை சுரேஷ் கேட்டாக வேண்டும்.. அதனால், அவன், கிருஷ்ணருக்குக் குதிரை ஆனார்…கிருஷ்ணருக்கு இந்த சவாரி என்றால் உயிர்…நம்மால், அவனுடைய இந்த விளையாட்டுக் குறும்பைக் கற்பனை தான் செய்ய முடியும்.

கிருஷ்ணர், ஆதித்யாவின் உடம்பில், பகல் முழுவதும் இருந்து, கல்பனாவின் குடும்பத்தை மகிழ்விப்பான். மாலை, வெளியே, சவாரி சென்று, சார்ஜாவைக் கண்டு விட்டு, சைவ ரொட்டி கலவை(சான்ட்விட்ச்) சாப்பிட வேண்டும். அவன், மிகவும் சுறுசுறுப்பாக இருந்தான், கல்பனாவின், குடும்பத்தினர், கிருஷ்ணரிடம், தயவு செய்து, தங்களை தூங்க விடும்படி, கெஞ்சுவதாக அமையும். ஏன் என்றால், அவன் இரவு மிகவும் நேரம் ஆனப் பொழுதும், சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருப்பான். அதிர்ஷ்டவசமாக, அது, வார இறுதி(உ.ஏ.இயில், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தான் வார இறுதி).
அடுத்த நாள், ஆதித்யா எழும் பொழுது, அவனுக்கு, மிகவும் அயர்ச்சியாக இருந்தது. முந்தைய தினம், அவன்/கிருஷ்ணர் செய்த எதுவும், அவனால் நினைவுக் கூற முடியவில்லை.
கிருஷ்ணா, உனது லீலைகள் மிகவும் விசித்திரமானவை…

விளக்கில் உள்ள எண்ணெய்யை, கீழேச் சிந்தி, பூஜை அறையை எண்ணெய் ஆக்குவது என்றால் கிருஷ்ணருக்கு உயிர். சிலமுறை கல்பனா,அவனிடம்,’கண்ணா, யார், இதைச் சுத்தம் செய்வது. அம்மாவால் , எப்பொழுதும் சுத்தம் செய்ய முடியாது’. திடீரென்று, எல்லா, எண்ணெயும் காணாமல் போகும்.
சில சமயம், எண்ணெய் ,நெய் ,திரி என்று எல்லாம், விளக்கில், சரியாக பொருந்தி இருக்கும். கல்பனா, வந்து விளக்கை மட்டும் ஏற்றுவதற்கு ஏற்றார் போல் இருக்கும்.
சில சமயம், விளக்கு, அதுவாக எரிந்துக் கொண்டு இருக்கும். ஒரு சமயம், மயில், சிறகு, கிருஷ்ணரின், சிலை அருகேத் தோன்றியது.

கிருஷ்ணருக்கு , மஞ்சடிக்குரு/அதிர்ஷ்ட சிவப்பு விதைகளை(பவள மர விதைகள்) வைத்து விளையாடுவது என்றால் உயிர்.
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திற்கு விஜயம் செய்பவர்கள், ஒருப் பெரிய பாத்திரம் நிறைய மஞ்சடிக்குரு விதைகளை, கருவறையின் வெளியேக் காணலாம். பக்தர்கள், பாலகிருஷ்ணர், இந்த மஞ்சடிக்குருக் கிண்ணத்தில் விளையாடுவதாக நம்புகின்றனர். அதனால், விதைகளை வாங்கி, இந்தக் கிண்ணத்தில் சேர்ப்பர். சிலர், காசுகளைப் போட்டு விளையாடுவர், கிருஷ்ணர் விளையாடுவதைப் போல சிறுக் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை , கிண்ணத்தில் உள்ள விதைகளோடு விளையாட விடுவர்.

மஞ்சடிக்குருவின் முக்கியத்துவம், இப்படிச் செல்கிறது….
பல காலங்களுக்கு முன்னர், ஒரு நெடுநாள் கிருஷ்ணரின் பக்தை, குருவாயூர் ஆலயத்திற்கு விஜயம் செய்ய ஆசைப் பட்டாள். கிருஷ்ணருக்கு ஏதாவது படைக்க ஆசைப்படாள். அவள், ஏழை என்பதால், அவளால், எதுவும் வாங்க முடியவில்லை. அவள், ஒரு மரத்தில், உள்ள பளபளப்பான சிவப்பு விதை அவள் கண்களை கவர்ந்தது. அவள் அவற்றை, சேகரிக்கத் தொடங்கினாள். ஒருநாள், அவற்றை ஆலயத்திற்குச் சென்று இறைவனுக்குப் பரிசளிக்கலாம் என்ற நம்பிக்கையோடு ஒன்று, ஒன்றாக, கீழிருந்து எடுத்து மாணிக்கப் பொக்கிஷமாக சேகரித்தாள். அதைத் துடைத்து, மழையிலிருந்தும், தூசியிலிருந்தும் அதை பாதுகாத்தாள். அவள் கண்களில், ஒவ்வொன்றிலும் அரவணைப்பும், ஒளியும் தெரிந்தது. அவள், ஆவலுடன், கடவுள் அதைப் பார்க்கும் தருணத்திற்காகக் காத்திருந்தாள். மற்றவர்கள், அவளைப் பார்த்து சிரித்தாலும், அவள் நம்பியதை செய்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வருடம், கழிந்தப் பின்னர், ஒருப் பெரியப் பை நிறைய மஞ்சடிக்குருச் சேர்ந்தது. அவளது வீட்டையும், பிரியப்பட்டவர்களையும், விட்டு அவள் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வீடு மலை மாகாணத்தில் இருந்தது. அவள், ஆறுகளையும், காடுகளையும் கடக்க வேண்டியிருந்தது. அவள் பல மனிதர்களை வழியில் கண்டாள். சிலர் அவளைப் பரிகாசம் செய்தனர். சிலர் கைத்தட்டினர். அவள் எதையும் பொருட்படுத்தவில்லை. அவள் மனது, ஆலயத்திலும், தெய்வத்திடமும் இருந்தது. ஒரு மனதோடு, பிரயாசையுடன் நடந்து சென்றாள். ஒவ்வொரு நாள் காலையிலும், கடினமான முட்டியுடன், எழுந்திருப்பாள். பகல் முழுவதும், உடல் வலிக்கும். இரவில், அயர்ச்சி மயக்கத்தால் சரிவாள். அவள், மனதில், இதைத் திரும்ப அவள் வாழ்நாளில் செய்ய முடியாது என்று அறிந்திருந்தாள். ஆனாலும், அவள், கண்களில்,கனவும், உதட்டில் சிரிப்பும் இருந்தது. நாட்பத்தி நான்கு கடினமான ,நாட்களுக்குப் பிறகு, அவள் குருவாயூர் ஆலயத்தை அடைந்தாள். அறிமுகமில்லாமல், அயர்ச்சியால், அவள், தடுமாறிக் கொண்டே, இலக்கை அடைவதற்காக,அவள் உடலைத் தூண்டினாள்.
இறுதியாக, கோவில் வாசலை அடைந்தாள். மனிதர்கள், அன்று ஆலயத்தில் விஷேச தினம் என்றுப் பேசுவதைக் கேட்டாள். வெளிப்படையாக, அன்று, மாதத்தின் முதல் தினம், உள்ளூர் ஆட்சியாளர் அல்லது நாடுவழி, ஆலயத்திற்கு விஜயம் செய்யும் மாதத்தின் முதல் நாள். அவனது பக்தியைக் காட்ட, ஒரு யானையை, ஒவ்வொரு மாதமும், கிருஷ்ணருக்கு, சமர்பிப்பார். இந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டே, மிகவும் கவனமாக, அவள், உட்பிரகாரத்தை நோக்கி, அவள் பையுடன் சென்றாள்.

நாடுவழி அதிகாரிகள், மனிதர்களை, வழியை விட்டு அகற்றி, ஆட்சியாளருக்கு வழிவகுத்தனர். அவர்களுடைய திமிரினால், அவர்களால், பிரயாணிகளையும், பக்தர்களையும் வித்தியாசம் செய்ய முடியவில்லை. கருணையில்லாமல், பக்தர்களை அவமானப் படுத்தினர். குழந்தைகளை மிதித்தனர், வழியை விட்டு அகற்றுவதற்காக. அந்த பக்தை, அவளது, மஞ்சடிக்குருப் பையை, பத்திரமாக வைத்திருந்தாள். ஆனால், அதிகாரிகள், அவளை அவமானப் படுத்தி கேலி செய்தனர். அவளை அங்கிருந்து முன்னுக்குத் தள்ளினர். ஆட்சியாளரின் யானையின் சத்தம் கேட்டதும், அதிகாரிகள், அவளை, ஒரு பக்கமான தள்ளிவிட்டனர். அவள் கீழே விழுந்தார். பைத் திறந்து, அனைத்து சிவப்பு விதைகளும் அங்கங்கே சிதரி விட்டது.
ஒரு கண்ணீர் துளி, அந்த அம்மாவின் கண்களில் இருந்து ஆலயத்தின் தரையில் விழுந்தது.உடனடியாக, ஆட்சியாளரின் யானைக்கு மதம் பிடித்து, ஆலயத்திற்குள் அங்கும் இங்கும் வெறித்தனமாக ஓடியது. மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடினர். யானை ஆலயத்திற்குள் இருக்கும் அனைத்து பொருட்களையும் அழிக்கத் தொடங்கியது. இதைக் கட்டுபடுத்த முடியாமல், கிருஷ்ணரிடம் ஆட்சியாளர், வேண்டினார். ஆலயத்திற்குள் இருந்து ஒரு குரல் கேட்டது-“எங்கே எனது மஞ்சடிக்குரு? எங்கே எனது பக்தை, நீங்கள், அவமானப்படுத்தி, காயப்படுத்திய பக்தை எங்கே? எங்கே அவள் ஆசையாக ஒருங்கிணைத்துக் கொண்டு வந்தப் பரிசு?”.

அவர்கள், முட்டாள்தனத்தை உணர்ந்து, அதிகாரிகள், அவளிடம், மன்னிப்புக் கேட்டனர். கீழே சிதரி இருந்த சிகப்பு விதைகளை ஒருங்கிணைத்து, அவளது பையை நிறைத்து, அவளை அந்த அதிர்ஷ்ட சிகப்பு விதைகளுடன், கருவறைக்கு, துணைச் சென்றனர். அவள், இறைவனுக்கு படைத்தப் பிறகு, யானை சாதாரண நிலைக்குத் திரும்பியது. இந்த பக்தையின் படைப்பின் நினைவாக, இன்று, ஒருப் பெரிய உருளி(கிண்ணம்) நிறைய மஞ்சடிக்குரு, ஆலயத்தின் உள்ளே வைத்திருக்கின்றனர்.. (https://manjadikuru.wordpress.com/2008/04/03/a-tale-to-tell-from-guruvayur/)
கிருஷ்ணர், கல்பனாவின் வீட்டிலும்,மஞ்சடிக்குருவிற்காக தனது பிரியத்தைக் காட்டுவார்.
அவள், கிண்ணத்தை கிருஷ்ணர் முன்னர் வைப்பாள். சில சமயம், அவன் சின்ன கை கிண்ணத்தின் உள்ளே சென்றதன் தடம் தெரியும். சில சமயம், அவைகள் கீழேத் தரையில் இருக்கும். விதைகள் பாதியாகக் குறையும், அவன் தூக்கி எறிந்து விளையாடுயதுப் போல்.
அவன், எலுமிச்சைச் சாறு எப்பொழுதும் கேட்பான். கல்பனா, வீட்டில், எழுமிச்சை எப்பொழுதும் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும். ஏனென்றால், இரவு ஒரு மணிக்குக் கூடத் தேவை ஏற்படும். அதனால்,கல்பனா, தன்னை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருப்பாள்.
எல்லா பண்டிகை நெய்வேத்யத்திற்கும், நிலையான கோரிக்கை, ‘பால் பாயாசம்’ .அவனுக்கு, அது மிகவும் இஷ்டம்.

பல சமயங்களில், கடைக்காரர், வீட்டிற்கு, சாமான்களோடு வந்து, வெறுப்புடன் திரும்புவார். காரணம்….
கல்பனா, சாமான்கள் கேட்டிருக்க மாட்டாள். ஆனால்,கடைக்காரர், கல்பனாவின் வீட்டுத் தொலைப் பேசியில் இருந்து, அவள் கேட்டதாகக் கூறுவார்.
யார், தொலைப்பேசியில் அழைத்து, கேட்டிருப்பார் என்று யூகம் செய்யுங்கள்…
ஹரே கிருஷ்ணா
‘கேரளாவில் உள்ள ஆலயத்திற்கு வந்து, அவன் தந்த ஆச்சிரியப் பரிசைப் பற்றித் தெரிய அடுத்த பாகம் வரை காத்திருப்போம்.’